பயணக்கட்டுப்பாடு காரணமாக எந்தவித வருமானமும் அற்ற நிலையில் மக்கள்
உதவிகள் இன்றி தொடர்ச்சியாக ஒரு மாதகாலமாக மிகவும் கஸ்டத்துடன் வாழ்ந்து வருவதாக மட்டக்களப்பு ,கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மினுமினுத்தவெளி,அக்குரானை மக்கள் தெரிவிக்கின்றனர்.
பயணக்கட்டுப்பாடு காரணமாக இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் எந்தவித வருமானமும் அற்ற நிலையில் மிகவும் கஸ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பயணத்தடை காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மினுமினுத்தவெளி,
அக்குறானை கிராம மக்களுக்கு இன்றைய தினம் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கையில் கோவிட் தொற்று அபாயம் காரணமாக தொடர்ச்சியாக ஒரு மாதங்களுக்கு மேலாக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்கள் தொழில் முடக்கம் காரணமாக நாளாந்த வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மினுமினுத்தவெளி, அக்குறானை கிராம மக்களுக்கு இது வரை எந்த வித நிவாரணமும் கிடைக்காத நிலையில் கஷ்டப்பட்டு வந்த நிலையில். லண்டனில் உள்ள ஸ்ரீலங்கன் குடும்ப அறக்கட்டளை அமைப்பினரும், இலண்டன் தேசத்தின் பாலம் அமைப்பினரும் இணைந்து 120 குடும்பங்களுக்கான 1500 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஊடாக வழங்கி வைத்துள்ளனர்.
இவற்றினை குறித்த பிரதேச மக்களுக்கு வழங்கும் நிகழ்வு கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிரான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யோகராஜா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் எஸ்.நிலாந்தன்,உபசெயலாளர் சுபஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அக்குறானை கிராமத்தில் உள்ள 75 குடும்பங்களுக்கான உதவிகளை இலண்டனில்
உள்ள இலங்கை குடும்ப நல்வாழ்வு அமைப்பு வழங்கி வைத்ததுடன், மினுமினுத்தவெளி
கிராமத்தில் வசிக்கும் 45 குடும்பங்களுக்கான உதவிகளை இலண்டனில் உள்ள தேசத்தின்
பாலம் அமைப்பினரும் வழங்கிவைத்தனர்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 2 மணி நேரம் முன்
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam