அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு எதிர்க்கட்சியாக போராடும் நிலை! அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரசாங்கம் சம்பந்தமாக மக்களின் நம்பிக்கை சிதைந்து போயுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,அமைச்சருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila ) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிதைந்து போன நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது சவாலானது எனவும் அவர் கூறியுள்ளார்.
வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நேர்மையான முயற்சியை மேற்கொண்டால் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பது முடியாத காரியமல்ல. அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது மிகவும் இலகுவான காரியம். கைவிட முடியாதது எதுவும் எனக்கில்லை.
எனினும் அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு, எதிர்க்கட்சியாக போராடி, அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டு வரும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
