தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கப்பலிலிருந்து வெளியான பொருட்கள் சேகரித்த மக்கள்
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கப்பலிலிருந்து வெளியான கழிவுகள் உள்ளிட்ட பொருட்களை மக்கள் சேகரித்துள்ளனர்.
தீ விபத்துக்கு உள்ளாகியுள்ள எம்.வீ. எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பலிலிருந்து வெளியாகும் பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன.
இவ்வாறு கரையொதுங்கும் கழிவுகள் மற்றும் இரசாயன பொருட்களை மக்கள் சேகரித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் விச ரசாயனப் பொருட்கள் காணப்படுவதாகவும் மக்கள் இவற்றுக்கு அருகாமையில் செல்லவோ தொடவோ கூடாது என மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
எனினும் நீர்கொழும்பு கரையோரப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த கழிவுகளையும் பொருட்களையும் சேகரித்து வருவதாகவும் இது ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.