அடுத்த ஜனாதிபதியாக நாமல் வர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச வர வேண்டுமென மக்கள் விரும்புகின்றார் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று கிராமங்களில் மட்டுமன்றில் சிறைகளிலும் நாமலே அடுத்த ஜனாதிபதி என பேசப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
76 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை விடவும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பார் என மக்கள் எதிர்பார்த்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டுக்காக கூடுதலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவை மக்கள் தோற்கடித்திருக்காவிட்டால் நாடு பாரியளவில் அபிவிருத்தியடைந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய தலைவர் நாமல் ராஜபக்ச மட்டுமேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam