இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.
ராவல்பிண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டாவது போட்டி
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 325 ஓட்டங்களைக் குவித்து 227 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி ஓரளவு சிறப்பாக விளையாடி 316 ஓட்டங்களைப் பெற்றது.

குசல் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும், சோனல் தினுஷ 54 ஓட்டங்களையும், மிலன் ரத்நாயக்க ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனையடுத்து, வெற்றிக்கு 90 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலக்கை எட்டியது.
இதன் மூலம் முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை 1-0 எனத் தனதாக்கியது.