களுவாஞ்சிகுடியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பு (Video)
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று மாலை பெட்ரோல் வந்ததையடுத்து, பெட்ரோல் நிரப்புவதற்காக மக்கள் முச்சக்கரவண்டி மற்றும், மோட்டார் சைக்கிளுடன் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் அரச உத்தியோகஸ்த்தர்கள் தனியான ஒரு வரிசையில் சென்று பெட்ரோல் நிரப்புவதற்கு சென்றவேளை ஏனையோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏமாற்றத்தில் திரும்பி சென்ற மக்கள்
இந்நிலையில் கடமையிலிருந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, பின்னர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ரி. அபயவிக்கிரம உடன் வருகை தந்து சிறிது நேரம் பெட்ரோல் வழங்குவதை இடை நிறுத்தப்பட்டு நிலையைச் சுமுகமாக்கியதும், பின்னர் வரிசைக்கிரமமாக பெட்ரோல் வழங்கப்பட்டன.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள மற்றுமொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் வருகை தருவதாகத் தெரிவித்து அங்கும் மக்கள் தத்தமது வாகனங்களுடன் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தபோதும் புதன்கிழமை இரவு வரைக்கும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் வருகை தராத நிலையில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



