ஜனாதிபதி கோட்டபாய பயணிக்கும் வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
மிரிஹான ஜூபிலி போஸ்டிற்கு அருகில் அமைந்துள்ள பெல்வத்த பால் மா விற்பனை நிலையங்களுக்கு முன்னால் மீண்டும் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த பால் மா விற்பனைக்கு நிலையத்திற்கு முன்னால் மக்கள் வரிசையில் நிற்பதனை தடுப்பதற்காக பொலிஸாரினால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த விற்பனை நிலையங்களிலிருந்து டோக்கன் முறையில் மக்களுக்கு பால் மாவினை விநியோகிக்குமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியிருந்தனர்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அவ்வாறான நடவடிச்கை அந்த விற்பனை நிலையங்கள் எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பால் மா தட்டுப்பாட்டிற்கமைய அந்த வர்த்தக நிலையத்திற்கு முன்னால் மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 4 மணி நேரம் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
