QR நடைமுறையின் பாதிப்பு: ஹட்டனில் மீண்டும் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
எதிர்வரும் நாட்களில் எரிபொருளினை முகாமைத்துவம் செய்து விநியோகிப்பதற்காக அரசாங்கம் நேற்று (15.03.2026) முதல் மீண்டும் நாட்டில் QR முறைமையினை அறிமுகம் செய்தது.
இதன் காரணமாக ஹட்டனில் தீடீரென காலை வேளையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை ஏற்பட்டது.
அரசாங்கம் நேற்று(15) காலை முதல் QR முறைமையினை நடைமுறைப்படுத்தியிருந்த போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அவை முறையாக வந்து சேராமையினால் காலை வேளையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR முறைமை இல்லாமல் எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகள் விசனம்
இது குறித்து சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,
உண்மையிலேயே உலகில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையினை தொடர்ந்து இவ்வாறான திட்டங்களை நடைமுறைபடுத்துவது நல்லது ஏன் என்றால் பலர் தேவையற்ற விதத்தில் எண்ணையினை சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.

இன்றும் சிலர் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்துக்கொள்கின்றனர், இவ்வாறான ஒரு முறையிருந்தால் எல்லோருக்கும் எந்தவித சிக்கலும் இன்றி தேவைக்கு ஏற்றவாறு பெற்றோல் டீசலினை பெற்றுக்கொள்வார்கள். அது தட்டுப்பாடு ஏற்படாமல் தொடர்ந்து வழங்குவதற்கு உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
