மிக நீண்ட வரிசையில் எரிபொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள் (Photos)
மட்டக்களப்பு - பட்டிருப்பு தொகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருட்களை பெறுவதற்காக நேற்றிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருட்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பெரியபோரதீவு, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, குருக்கள்மடம், கல்லாறு, களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் முடிந்து விட்டதாகவும் அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் கார் உள்ளிட்ட பல வாகனங்களுடன் அதன் உரிமையாளர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருட்களைப் பெற்றுச் செல்வதுடன், இன்னும் சிலர் கலன்களிலும் எரிபொருட்களைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
அனைத்து எரிபொருள் நிலையங்களிலும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மக்களை வரிசை கிரமமாக அனுப்பி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
எரிபொருளைப் பெறக் காத்திருந்தோர் தெரிவிக்கையில்,
தாம் குறிப்பாக வெயில், மழை, இரவு என பாராது பல மணிக்கணக்காக காத்திருக்கின்ற போதிலும், 1000 ரூபாவிற்கு தான் எரிபொருட்களை தருகின்றார்கள்.
இது இரண்டு நாட்களில் தீர்ந்து விடும், மீண்டும் மூன்றாவது நாள் இதுபோன்று மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
எனவே எமது வாகனங்களிலுள்ள எரிபொருள் தாங்கி முழுவதும் நிரம்பும் வகையில் எரிபொருட்களைத் தந்து உதவினால் நாம் ஒரு வாரத்திற்குப் பாவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.










பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
