நீண்ட நேரம் காத்திருந்தும் எரிபொருள் இன்மையால் வீதிக்கிறங்கிய மக்கள் (Video)
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிலையத்தில் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவித்ததையடுத்து கொள்வனவிற்காக காலை 04.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் வழங்காமையினால் மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தினை அறிந்த பொலிஸார் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு விரைந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.



