நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்துடன் மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் : மனுஷ நாணயக்கார
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் கூறிய தீர்வுக்கு முழு நாடும் கைகோர்த்து வருவதாக காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற 'ஜயகமு ஸ்ரீலங்கா' நடமாடும் மக்கள் சேவையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
குறித்த நடமாடும் மக்கள் சேவையானது நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
இலவசக் கல்வி
இதன்போது மேலும் கருத்துரைத்த அமைச்சர் “எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது, தீர்வு இல்லை என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறினேன் , இன்று அந்தத் தீர்வுக்காக இனம, மத நிற மற்றும் கட்சி வேறுபாடின்றி மக்கள் ஒன்றுபடத் தொடங்கியுள்ளனர்.
நாட்டை கட்டியெழுப்ப புலம்பெர்ந்த தொழிலாளர்களின் பலம் இல்லையென்றால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.

காலி மாவட்ட ரன்தொம்பே இல் பிறந்த சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர அவர்கள் முழு நாட்டிற்கும் இலவசக் கல்வியை வழங்கியவர் இன்று பல்கலைக்கழகங்களில் கூச்சலிடுபவர்களுக்கு இது தெரியாது.
இன்று பல்கலைக்கழகப் மாணவர்கள் மகாபொல புலமைப்பரிசிலைப் பெறக் காரணம் லலித் அத்துலத்முதலி அவர்கள் .எனவே இலவசக் கல்வியின் பெறுமதியை அறிந்த ஜனாதிபதி இன்று பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் இங்கு கூறியிருந்தேன் , எனக்கு கொள்கை இல்லை, என்னிடம் தீர்வு தான் இருக்கின்றது. ஆனால் இன்று முழு நாடும் அந்தத் தீர்வுக்காகத் திரண்டுள்ளது.
எனவே இன, மதம் நிற கட்சி என பிரிந்து செல்லாது நாட்டுக்கு சிறந்த தீர்வைப் பெற்றுக்கொள்ள மக்கள் ஒன்றுபட ஆரம்பித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri