அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் எதுவும் நடைபெறவில்லை: தி.சரவணபவன் (Photos)

Batticaloa Sri Lanka Development
By Kumar Jun 25, 2022 06:00 PM GMT
Report

அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவிதமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை.

செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் நாங்கள் அறியவில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுப்பங்கேணியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை இன்று திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் உள்ள மக்களின் நன்மை கருதி இந்த பொதுச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் காலமான மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் வே.தவராஜாவின் முன்மொழிவுக்கு அமைவாக குறித்த சந்தை அமைக்கப்பட்டது.

எனினும் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் ஏற்பட்ட நிர்வாக ரீதியாக குழப்பங்கள் காரணமாக நிர்மாணப்பணிகள் தடைப்பட்டிருந்த நிலையில் புதிதாக கடமையேற்ற ஆணையாளரினால் குறித்த சந்தை விரைவாக புனரமைக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளையும் கொண்ட சந்தை

அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் எதுவும் நடைபெறவில்லை: தி.சரவணபவன் (Photos) | People To Develop Batticaloa

மீன்சந்தை, மரக்கறிச்சந்தை, கோழி, ஆடு, மாடு விற்பனை நிலையங்கள் உட்பட சகல வசதிகளையும் கொண்டதாகவும் மக்கள் இலகுவாக வந்துசெல்லும் வகையிலும் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் நாகராஜா மதிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் மாநகரசபையின் ஆணையாளரும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளருமான க.சித்திரவேல் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் எதுவும் நடைபெறவில்லை: தி.சரவணபவன் (Photos) | People To Develop Batticaloa

இதன்போது சந்தை திறந்துவைக்கப்பட்டதுடன் பொதுச்சந்தை வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதன்போது உரையாற்றிய மாநகரசபை முதல்வர்,

”மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான எங்களது அணி பொறுப்பெடுத்த பின்பு மட்டக்களப்பு நகரத்தில் பெரியளவிலான அபிவிருத்திகளை எங்களால் முன்னெடுக்க முடிந்தது.

எங்களது திட்டங்களை முன்மொழியும்போது வட்டார உறுப்பினர்களின் பிரேரணைகளை நாங்கள் கவனம் செலுத்துவதால்தான் எங்களுடைய திட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றது.

அந்த வகையில் கருவேப்பங்கேணி பகுதியில் ஒரு சந்தை உருவாக்கப்பட வேண்டும், அதன் மூலமாக வீதியோர வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எங்களது முன்னாள் உறுப்பினர்  தவராஜா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இந்த கட்டிடத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்

அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் எதுவும் நடைபெறவில்லை: தி.சரவணபவன் (Photos) | People To Develop Batticaloa

இங்கு அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவிதமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை. செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் நாங்கள் அறியவில்லை. மக்கள் வரிசைகளில் நின்று நாட்கணக்காக எரிபொருளிற்காக அடிபடுகின்றனர்.

அந்த எரிபொருளை சரியான முறையில் எங்களுடைய பிரதேசத்திற்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற இரண்டு உறுப்பினர்களை சார்ந்தது. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இங்கு நடைபெறவில்லை. தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக நின்று கஷ்டத்திற்கு மத்தியில் தமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுவருகின்றனர்.

எனினும் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் குடும்ப அட்டை மூலமாக எரிபொருள் விநியோகத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலமாக அனைவரும் குறிப்பிட்ட அளவேனும் எரிபொருளை பெறக்கூடியதாக இருக்கும்.

எனினும் மற்றைய பிரதேசங்களில் ஏனைய சில மாவட்டங்களில் குடும்ப அட்டைக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எங்களுடைய அரசாங்க அதிபர் வேறு சில அழுத்தங்கள் காரணமாக அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எரிபொருள் வரிசைகளை குறைக்கலாம். நாங்கள் எங்களுடைய முயற்சிகளின் மூலமாக நிதிகளை ஏற்பாடு செய்கின்றோம். நேற்று முன்தினம் 30 மில்லியன் ரூபா செலவில் நாவற்குடாவில் உலகவங்கியின் நிதியுதவியுடன் ஒருபொதுச்சந்தைக்கான அடிக்கல் நடப்பட்டது.

மூன்று வாரங்களுக்கு முன்னர் பிணங்கள் எரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது. 31 மில்லியன் ரூபா செலவில் அதற்கான கட்டுமாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனை நாங்கள் செய்யும்போது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தி பிணம் எரிக்கும் இயந்திரம் அங்கே பொருத்தப்பட்டால் சுற்றாடல் மாசடையும் என்றும் இதனால் அதனை தடுக்கவேண்டுமென்றும் அந்தத் திட்டத்திற்கு சில தடைகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.

அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் எதுவும் நடைபெறவில்லை: தி.சரவணபவன் (Photos) | People To Develop Batticaloa

எனினும் எங்களுடைய செயற்பாடு எப்பொழுதும் சட்டரீதியானதாக இருக்கும். சட்டரீதியான ஆவணங்கள் அனைத்தும் எங்களால் பெறப்பட்டிருக்கின்றன. எங்களால் ஆரம்பிக்கப்பட்ட தகனசாலையின் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே முடிவடைந்து பொதுமக்களிடம் கையளிக்கப்படும்போது சுற்றாடல் பாதுகாக்கப்படும்.

வேப்ப மரங்கள் வெட்டுவது தவிர்க்கப்படும். தரையில் வைத்து எரிப்பது தவிர்க்கப்படும். இதனால் சூழல் பாதுகாக்கப்படுமே தவிர மாசடையாது. எங்களுடைய இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசியல் ரீதியான தடைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது. உங்களால்தான் செய்ய முடியாது. நாங்கள் செய்கின்றோம். எங்களை செய்யவிடுங்கள்.

நாங்கள் மத்திய அரசிடமிருந்தோ மாகாண அரசிடமிருந்தோ நிதி கேட்கவில்லை. நாங்கள் எங்கள் முயற்சியால் நிதியை பெற்று எங்களுடைய வேலைகளைச் செய்வோம். எங்களுடைய அபிவிருத்திச் செயற்பாடுகளை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு நீங்கள் அனைவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

எங்களுடைய காலத்தில் அதிகமான வீதிகள் புனரமைக்கப்பட்டன. ஒப்பந்தங்கள் கொடுக்கப்படுவதில்லை. நேரடியாக மாநகரசபை அந்த புனரமைப்பு பணிகளை முன்னெடுத்தது" என்றார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US