மட்டக்களப்பில் அதிகரித்துள்ள குரங்குகளின் தொல்லை: சிரமத்தில் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் குரங்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு குரங்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளன.
கிராமங்களுக்கு கூட்டம் கூட்டமாக பகல் வேளையில் உட்புகும் குரங்கள் மக்கள் குடியிருப்பு வீடுகளின் மேல் தாவித் திரிவதனால் வீட்டுக் கூரைகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, மழை காலங்களில் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்களி்ன் கோரிக்கை
மக்கள் குடியிருப்புக்குள் அமைந்துள்ள வாழை, மா, கொய்யா, உள்ளிட்ட பயன் தரும் பயிரினங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும், அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பகலில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வேளையில் வீடுகளுக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது குடிமனைகளை குரங்குகள் மிகவும் அலங்கோலமாக சேதப்படுத்தி வைத்திருப்பதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தினை கருத்தில் கொண்டு மக்கள் குடியிருப்புக்குள் உட்புகும் குரங்குகளைக் கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri