குடிநீர் பிரச்சினையால் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள்(Photo)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதற்கமைய, மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களில் குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மக்கள்
குறிப்பாக இந்த பிரதேசத்தில் காணப்படுகின்ற கிணறுகளில் அதிகமான கிணறுகள் ஆழங் கூடிய கிணறுகளாக காணப்படுகின்றன.
அதேவேளை பெரும்பாலான கிணறுகள் நீர் வற்றியும் காணப்படுகின்றன.

இந்த நிலையில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கரைதுறைப்பற்று மக்கள்
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு மற்றும் பிலக் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த பிரதேசத்திலே அமைக்கப்பட்டிருக்கும் குழாய் கிணறுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவற்றைப் புனரமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri