எரிபொருள் பெற்றுகொள்ள பற்றுச்சீட்டு கிடைக்காததால் கொந்தளித்த மக்கள்: வீதியை மறித்து போராட்டம் (Video)
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்கள் தற்போது பிரதான வீதியை மறித்து போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுப்பட்டிருந்த போதிலும், தற்போது பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பற்றுச்சீட்டு கிடைக்காத மக்கள்
தொடர்ச்சியாக நான்கு நாட்களாக மக்கள் எரிபொருளை பெற்றுகொள்வதற்காக இரவு பகலாக முழு நாட்களும் குறித்த எரிபொருள் நிலையத்தின் முன்பாக மக்கள் காத்திருந்துள்ளனர்.
ஆனால் இன்று குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் எதிர்வரும் நாட்களில் எரிபொருளை விநியோகிப்பதற்காக இலக்கச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் இலக்கச்சீட்டுகளை பெற்றுகொள்ள முடியாது போன மக்கள் தற்போது கொழும்பு - கொட்டாஞ்சேனை பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வரும் நிலையில் அதற்கு பயனின்றி போகும் சந்தர்ப்பத்தில் ஆவேசத்துடன் நடந்துவருகின்றனர்.