24 மணிநேரம் வரிசையில் நின்று எரிபொருள் பெற்ற மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த நாட்களாக எரிபொருள் வரிசைகள் பாரிய அளவில் அதிகரித்து வருகின்றன.
எரிபொருளைப் பெறுவதற்கு 24 மணித்தியாலங்களுகும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் சாரதிகள் தெரிவித்தனர்.
தம்புள்ளையிலுள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன, கார் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுடன் வரிசையில் நிற்கின்றனர்.
கேன்களில் எரிபொருள் வழங்காததால் விவசாயிகள் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளதென தெரியவந்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பல இயந்திரங்களுடன் விவசாயிகள் வரிசையில் காத்திருந்தமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.




அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan