போராட்டம் மேற்கொண்டு மின்சாரத்தை திரும்ப பெறவேண்டிய நிலையில் இலங்கை மக்கள்
இலங்கை வரலாற்றில் எப்போதுமில்லாத அளவிற்குப் போராட்டம் மேற்கொண்டு மின்சாரத்தைத் திரும்பப் பெறவேண்டிய இக்கட்டான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் இன்று ஜனாதிபதியின் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
நாட்டில் இன்றைய தினம் தொடர்ச்சியான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை, எரிபொருள் இன்மை உட்பட நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரியே மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள்.
இலங்கை வரலாற்றில் எந்த அரசாங்கத்தின் போதும் இல்லாத ஒரு நிலைமை தற்போது உருவாகியுள்ளதால் இவ்வாறான மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.
போராட்டம் காரணமாக ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




