பிரான்ஸில் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை மடக்கிப்பிடித்த பொலிஸார்
பிரான்ஸில் 40 புலம்பெயர்ந்தவர்களுடன் மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் Boulogne-sur-Mer வடக்கே Wimereux க்கு அருகே உள்ள D237 சாலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு வாகன சாரதியையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதேவேளை பிரான்ஸின் கடற்கரை நகரமான Wimereux-ல் மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழக்கும் அபாயம்
Wimereux நகரை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து நீண்ட காலமாக மனித கடத்தல்காரர்கள் பிரித்தானியாவுக்கு படகுகளை செலுத்துகின்றனர்.
கடந்த சனிக்கிழமை ஆங்கில கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட 5 நபர்கள் Wimereux கடற்கரையில் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 5 பேரும் குளிர் நீரில் தாழ்வெப்பநிலை (hypothermia) பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |