மட்டக்களப்பில் சஜித்துக்கான ஆதரவை பட்டாசு கொளுத்தி தெரிவித்த மக்கள்
எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரமதாஸ(Sajith Premadasa) ஜனாதிபதி வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் பட்டாசு கொழுத்தி வரவேற்கும் ஆரவார நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(15.08.2024 நடைபெற்றுள்ளது.
புகைப்படம் தாங்கிய பதாகைகள்
இதன்போது ஆதரவாளர்களாளால் சஜித் பிரேமராச அவர்களின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் தொங்டவிடப்பட்டு, பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவர் சோ.கணேசமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட முகாமைபாளர் சிறீஸ்குமார் மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயலாளர் ஜோன் கெனத், பிரதேச அமைப்பாளர்கள் பிரசார அமைப்பாளர்கள், மகளீர் அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
