அசுத்தமற்ற பிரதேசத்தினை உருவாக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் தவிசாளர் வே. கரிகாலன்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியின் சுத்தம் மற்றும் சூழல் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு நகரப்பகுதியில் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு கொழுத்துதல் தவிர்க்கப்படவேண்டும் என சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதேச செயலகம் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மிக அதிகமான பட்டாசுகள் கொளுத்தப்பட்டு நகரப்பகுதி குப்பைகளால் சூழப்பட்டு காணப்படுகின்றது. எமது நகரத்தினை சுத்தமாக பேணுவதும் சனநெரிசல் மிகுந்த பகுதியில் சுத்தமான காற்றை சுவாசிக்க வழி ஏற்படுத்துவதும் எம் கடமையாகும்.
எனவே குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு எமது நகரில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கும் அசுத்தமற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன் கேரிக்கை விடுத்துள்ளார்
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மகளிர் உலகக்கோப்பை - இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ News Lankasri