சுகாதார ஊழியர்களை மக்கள் தாக்க வேண்டும்:ஆளும் கட்சி உறுப்பினர்
சுகாதார சேவை ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி, அதனுடன் சம்பந்தப்பட்டவர்ளுக்கு எதிராக மக்கள் பொல்லுகளை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் கட்சிகள் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள, அந்த அரசியல் கட்சிகளின் அனுசரணையில் நடக்கும் தொழிற்சங்க போராட்டங்கள் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் விஜித ஹேரத் மீது நடத்தப்பட்ட முட்டை தாக்குதல் மற்றும் கல்வீச்சு தாக்குதலுக்கு இணையான தாக்குதலை போன்று போராட்டகாரர்களுக்கு எதிராக பெட்டன் பொல்லு தாக்குதல் நடத்த வேண்டும்.
மக்கள் தமது அதிருப்தியை வெளிக்காட்ட இருக்கும் ஒரே வழி பெட்டன் பொல்லு தாக்குதல். அரசியல் கட்சிகளின் உதவியை பெறும் தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கத்துடன் பிரச்சினைகள் இருந்தால், மக்களை சிரமத்திற்கு உள்ளாக்காது அரசாங்க்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குட்டி ஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.