சரியான கொள்கை இல்லாத வேட்பாளர்கள்: மக்கள் போராட்ட முன்னணியின் விமர்சனம்

Jaffna Northern Province of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Theepan Aug 29, 2024 08:49 PM GMT
Report

எந்த ஒரு வேட்பாளரும் சரியான கொள்கையுடனும் கோட்பாட்டுடனும் இந்த அரசியல் களத்தில் இல்லை என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று (29.08.2024) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

“எந்த ஒரு வேட்பாளரும் சரியான கொள்கையுடனும் கோட்பாட்டுடனும் இந்த அரசியல் களத்தில் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்த வறுமையை நாங்கள் நிரப்ப வேண்டிய தேவையை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.


இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள்

தீர்வு திட்டம்

எனவே, இந்த கொள்கை பிரகடனத்தின் ஊடாக வர்க்க பிரச்சனைகளில் இருந்து இனப்பிரச்சினை வரையிலான பிரச்சினைகளில் இருந்து, எப்படி வெளிவருவது தொடர்பான விடயங்களை மிகத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களை பொருத்தவரை, மிக நீண்ட காலமாக ஒரு பாரிய சிக்கலுக்குள் இருக்கின்றனர். இனப்பிரச்சினை எங்களை கொன்று குவித்திருக்கின்றது.

சரியான கொள்கை இல்லாத வேட்பாளர்கள்: மக்கள் போராட்ட முன்னணியின் விமர்சனம் | People S Struggle Front Critisize Candidates

மக்கள் இனப்பிரச்சினையினால் இழந்தவை கொஞ்ச நஞ்சம் அல்ல. இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வற்ற முறையில் இந்த விடயம் செல்ல முடியாது.

எனவேதான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நாங்கள் சியாச்சி என்ற தீர்வுத் திட்டத்தை முன்வைத்திருக்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் தீர்க்கமான பல கொள்கைகளோடு அடித்தட்டு மக்களினுடைய அடிப்படை தேவைகள் மற்றும் இந்த நாட்டுக்கான சரியான பாதை போன்றவற்றை மிக ஆழமாக சிந்தித்து எங்களுடைய கொள்கையாக வெளியிட்டுள்ளோம்.

அடிப்படை அரசியல் கோரிக்கைகள்

குறிப்பாக 39 வேட்பாளர்கள் இருந்தாலும் இங்கு இரண்டே இரண்டு கொள்கைகள் மட்டும் தான் இருக்கின்றன என்பதை நாங்கள் இந்த தேர்தல் பிரச்சாரங்களில் அடிப்படை அம்சமாக குறிப்பிடுகின்றோம்.   

எங்களுடைய கொள்கை மிகவும் தனித்துவமாக இருப்பதோடு அவை மக்களுக்கானது. நாங்கள் கொள்கை பிரகடனத்திலும் மக்களின் கொள்கை, மக்களின் வேட்பாளர் என்று தான் பாவிக்கின்றோம்.

சரியான கொள்கை இல்லாத வேட்பாளர்கள்: மக்கள் போராட்ட முன்னணியின் விமர்சனம் | People S Struggle Front Critisize Candidates

இந்த கொள்கைகளை நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய அடிப்படை அரசியல் கோரிக்கைகளுக்கு பதில் இல்லை.   

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மிக மோசமான அடக்கு முறையினை எதிர்நோக்குகின்றனர். இங்கு சட்டவிரோதமாக விகாரைகள் கட்டப்படுவதோடு ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்களையும் குவித்து வைத்திருக்கின்றார்கள்.   

தொடர்ந்து பயங்கரவாத தடை சட்டம் உள்ளது. இப்படியான எந்த விடயங்களுக்கும் தீர்க்கமான ஒரு பதிலை சொல்ல முடியாத கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்” என கூறியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றங்களுக்கு முயற்சி

ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றங்களுக்கு முயற்சி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குகதாசன் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குகதாசன் முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US