மக்கள் ஆணையும் மாகாண சபைத் தேர்தலும்

Srilanka Election Mahindha Chandrika bandaranayaka
By DiasA May 01, 2021 10:04 PM GMT
Report

இன்று இலங்கை அரசியலில் அரசுத்தலைவர் 'மக்கள் ஆணையை நிறைவேற்றுவேன் மக்கள் ஆணைக்கு கட்டுப்படுவேன். மக்கள் ஆணையின்படி ஒழுகுவேன்' என அடிக்கடி பேசுகிறார். அப்படியானால் இலங்கை அரசுத் தலைவர் கடந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மாகாணசபை ஒழிப்பு, புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் என்ற இரண்டு விடயங்களும் முக்கியத்துவப்பட்டிருந்தது.இதனை சிங்கள மக்கள் ஏற்றுத்தான் அரசுத் தலைவருக்கும், கட்சிக்கும் வாக்களித்தனர் என கட்டுரையாளர் திபாகரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எனவே புதிய அரசியல் யாப்பை உருவாக்குதல், மாகாணசபை ஒழித்தல் என்ற இரண்டையும் உள்ளடக்கமாகக் கொண்ட அதுதான் அந்த மக்கள் ஆணையாகும். மாகாணசபை முறையை ஒழிப்பது, புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது என்பதற்காகத்தான் சிங்கள மக்கள் அரசுத் தலைவரை நம்பி வாக்களித்தனர்.

இப்போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் படவில்லை. மாகாணசபை ஒழிக்கப்படவில்லை. மாறாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.  மேற்குலகு மற்றும் இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக அரசாங்கத்தின் இலங்கை அரசாங்கத்தின் மூத்த அரசியல் அமைச்சர் ஜி எல் பீரிஸ் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

எனவே இங்கு இலங்கை ஜனாதிபதி அரசியல் மரபை,அரசியல் முறைமையை புறந்தள்ளி மக்கள் ஆணையை பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாது செயற்பட்டு வருகிறார் என்பது நிரூபணமாகிறது.

இந்நிலையில் மக்கள் ஆணை என்பதை அரசுத் தலைவர் இனிமேலும் உச்சரிப்பது அரசியல் மரபுக்கும், அரசியல் முறைமைக்கும் முரணானது.எனவே அந்த மக்கள் ஆணைக்குறிய அங்கீகாரம் வலுவிழந்து செல்கிறது அல்லது வலுவிழந்து விட்டது. மாகாணசபைத் தேர்தலை இலங்கை ஆட்சியாளர்கள் நடத்துவார்களா? நடத்த மாட்டார்களா என்ற வாதப் விவாதங்களுக்கு இடையில் இந்தப் பின்னணியில் இத்தேர்தல் பற்றிய உள்ளக வெளியாகிய அரசியல் நிலைப்பாடு பற்றிய விடயங்களே முக்கியமானது.

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏடு மாகாணங்களிலும் வெற்றி பெற முடியாது. குறைந்த வாக்குகள் மாத்திரமே விளிம்பு நிலையிலேயே வெற்றி பெற முடியும். அது அவருடைய வாக்குவங்கி வீழ்ச்சியை வெளிப்படுத்தும்.

எனவே நடைமுறை ரீதியில் மாகாண சபைத் தேர்தலுக்கு ராஜபக்ச குடும்பம் தயாரில்லை. ஆனால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கின்ற யாப்பின் விவகாரமும், 13வது திருத்தச் சட்டத்தின் மூலமும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபை ஒழிக்க முடியாது.

எனவே புதிய யாப்பை கொண்டுவந்து மாகாண சபைக்குரிய அல்லது இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டவற்றை புறந் தள்ளக் கூடிய ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும். அத்தோடு அண்மையில் வெளியாகிய ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் 4611 அறிக்கையிலும் தமிழ் மக்களுக்கு நீதியான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டதிலிருந்து. மேற்குலகமும்இ அமெரிக்காவும்இ இந்தியாவும் அதனை பெரிதும் எதிர்பார்ப்பது கவனத்துக்குரியது.

ஆனால் இந்த மேற்குலக அழுத்தங்களை விட உள்நாட்டில் தனக்கு இருக்கின்ற செல்வாக்கையும் அதே நேரத்தில் வீட்டோ அதிகாரமுள்ள சீனா இலங்கை அரசின் பக்கம் நிற்பதாலும் ராஜபக்சக்கள் தங்களின் புஜங்களை உயர்த்தி தேர்தலை நடத்தாமல் காலத்தை இழுத்தடிக்கவே முனைவர்.

ஈரடி முன்னாள் ஓரடி பின்னால் என்ற தத்துவத்தைப் பயன்படுத்தி ராஜபக்சக்கள் தேர்தலை நடத்தும் வியூகத்தை பகுப்பர் இருப்பினும் (கன்ஸ்டிட்யூன்ஸிஸ்) போலியான காரணிகளைக் கண்டறிதல் அல்லது பாதகமான காரணிகளை கண்டறிந்து அதாவது நடத்தப்படமாட்டாது என்றாலும் கூட தேர்தலை நடத்துவதற்கான அற்ப வாய்ப்புகள் இருக்கின்றது என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில் தமிழர்கள் இருக்கின்ற அரசியல் சூழலை தமக்கு சதகமாகவும், பொருத்தமாக வடிவமைப்புச் செய்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்களுடைய வாக்குகளை ஒன்று குவித்து தமிழ் மக்களுக்கான ஒரு மக்கள் ஆணையை பெறுவது தான். அந்த மக்கள் ஆணை தான் சிங்கள தேசம் முன்வைக்கின்ற மக்கள் அணைக்கு மாற்றீடாக, அதற்கு ஈடுகொடுக்க கூடியதான ஒரு தமிழ் மக்களின் ஆணையை பெறவேண்டும். இதற்கு தமிழ் மக்கள் அரசியல் சுபிட்சத்தை கருத்தில் கொண்டு கட்சி பேதங்களை மறந்து தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து வடக்கிலும், கிழக்கிலும் பொது வேட்பாளர்களை முன்னிறுத்த வேண்டும்.

தேர்தலை எதிர்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை ஒன்று குவித்தால் தமிழ் மக்கள் அரசியல் தளம் என்பது புதிய தேசிய கட்டுமானத்தை நோக்கி நகர முடியும். இவ்வாறு தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயமாக எதிரி தேர்தலை நடத்த முன் வர மாட்டான். எனவே இங்கே தமிழ் தரப்பின் முன்னே பல விதிகளுண்டு.

1) பொது வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர் கொள்ளுதல்.

2) தமிழ் மக்கள் ஒரு குடைக்கீழ் நின்று தேசியப் புரட்சியை எடுத்தல். தமிழ் மக்கள் திரளைக் கண்டு தேர்தலை எதிரி தடுமாறுவார். தேர்தலை தவிர்க்கலாம். அதுவும் நமக்கு வெற்றியே.

3) தேர்தல் நடத்தாமல் விடப்படும் பட்சத்தில் சர்வதேச ரீதியாக அமெரிக்கா இந்தியா ,பிரித்தானியா ,ஜெர்மன் போன்ற மேற்குலக நாடுகளுடன் சிங்கள தேசத்திற்கு இருக்கின்ற நட்பு முரண்பாட்டை பகை முரண்பாடாக மாற்றியமைக்கவும் முடியும்.

4)தமிழர் தரப்பிற்காக போராடுவதற்காக நாடாளமன்ற அரசியல் என்றும்இ நிர்வாகத்துக்காக மாகாணசபை அரசியல் என்றும் இரண்டு பிரிவுகளாக வகுத்து தமிழ் தேசியத்தை கட்டமைப்பு செய்தல்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் 46 ஆரஞ்சில் ஒன்று தீர்மானம் இலங்கையில் நிகழ்ந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதே சமயம் வடமாகாணசபை ஏற்கனவே ''முள்ளிவாய்க்கால் நிகழ்ந்தது இனப்படுகொலை'' என்று தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது

1)போர்க்குற்றம் சம்மந்தமான ஆதாரங்களைத் கண்டறிவது திரட்டுவது என்பவற்றிற்கும் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும் முழுமையான ஆதரவளித்தல், ஒத்துழைத்தல் உதவுதல் என்றவகையில் வடமாகாணசபை ஆதரவளிக்கும்.

2) வடமாகாணசபை தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, மற்றும் போர்குற்ற ஆதாரங்களை தேடுவது,திரட்டுவது, வெளிப்படுத்துவது, பாதுகாப்பது ஆகியவற்றை செய்யும். என்ற தீர்மானங்களை வடமாகாணசபை தேர்தலின் போது தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைக்க வேண்டும்.

தேர்தல் நடக்குமா நடக்காதா என்பதை பற்றி நாம் ஒரு நுணுக்கமான முன் தீர்மானம் எடுக்க வேண்டியது அவசியம். அதாவது வரும் முன் வரும்பொருள் உரைத்தல் என்கின்ற தமிழ் பாரம்பரியத்திற்கு அமைய அதிகம் சாத்தியப்பாடுடைய ஒரு விடயம் பற்றி முன் அறிவைக் கொண்டிருப்பதும், முன் தீர்மானம் எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

இது இலகுவான ஒரு விடயமல்ல. முழுமையான அர்ப்பணிப்புடன் தலைவர்களும், அறிஞர்களும், சமூகம் முன்னோடிகளும் செயற்பட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும். ஆயினும் எனக்கு எட்டிய வரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை முன்வைப்பது எனது ஊடக தர்மமாகும். இதன் அடிப்படையில் உள்நாட்டு அரசியல் நிலவரத்தின் படி மாகாணசபைத் தேர்தல்  என்பது நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் நிச்சயமாக நூறுவீதம் இல்லை.

ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பொதுஜனபெரமுன கட்சி இப்போதைய அரசாங்கக் கட்சி மாகாணசபையை ஒழிப்பது புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது என்ற கொள்கையை தேர்தல் விஞ்ஞாபனமாக சிங்கள மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள். அதற்கமைய இன்று மாகாண சபைத் தேர்தலை நிறுத்திவிட்டு புதிய அரசியல் யாப்பை கொண்டு வரும் படி பௌத்த மகா சங்கமும், பிக்குகளும், தீவிர சிங்கள பௌத்த இனவாதிகளும் கோரி நிற்கின்றனர்.

எனவே இவர்கள் எதிர்வரும் காலத்தில் மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்பர். எனவே மக்கள் ஆணையின் பிரகாரமும், பௌத்த சங்கத்தின் கருத்து படியும், தீவிர சிங்கள பௌத்த இனவாதிகள் உடைய கருத்து படியும், உள்நாட்டு நிலவரப்படி ராஜபக்சக்கள் விரும்பினாலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை. அரிதினும் அரிது. ராஜபக்சவினால் தேர்தல் நடத்தப்பட முடியாது.

இந்த தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை, முன்பு இருந்ததை விட தற்போது கட்சியின் ஆதரவு குறைந்து இருக்கிறது. அண்மைக்காலத்தில் ராஜபக்சக்களுடைய கட்சியினுடைய வாக்கு வங்கி குறைவடைந்து இருப்பதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. எதிர் கட்சி பலவீனமாக இருந்தாலும் ராஜபக்சக்கள் மீதான அதிருப்தி தற்போது வளர்ந்து வருவதைக் காட்டுகின்றது. சிங்கள தேசத்தின் அரசியலில் சாதி ஆதிக்கம் சாதிப்பாகுபாடும் மிகப் பலமானது.

சிங்கள சமூகத்தில் தீண்டாமை இல்லையேயெழிய சாதிய ஒடுக்குமுறை என்பது அரசியலிலும், மதத்திலும் ஆளும் வர்க்கக் குடும்பங்களில் நூறுவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனைவிடவும் உயர் நிறுவனங்களின் தலைவர்கள், மதபீடங்களின் தலைவர்களை தீர்மானிப்பதில் சாதி ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அதாவது அமைச்சுப் பதவி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி, உயர் நிறுவனங்களின் முகாமையாளர்கள், தலைவர்கள் பதவி என்பனவே சாதியின் அடிப்படையில்த் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

சாதி அடிப்படையில் பார்த்தால் ரணசிங்க பிரேமதாசா சிங்கள சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ரண என்ற சொல் பின்தங்கிய சாதியை குறிக்கும் சொல்லாகும். அவ்வாரே விஜயகுமாரணதுங்க சலாகாம சாதியைச் சேர்ந்தவர். ஆனால் சந்திரிகா பண்டாரநாயக்கா குடும்பம் அவரின் பெயரில் உள்ள ரண என்ற சொல்லை வெட்டி எடுத்துவிட்டு சந்திரிகா அவர்கள் விஜயகுமாரதுங்க சந்திரிகா பண்டாரநாயக்கா என தன் பெயரை மாற்றி அமைத்து கொண்டதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

அத்தோடு சாதீய அடிப்படையில்த் தான் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு துண்டாக உடைந்து காணப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே பௌத்த சிங்கள பேரினவாதத்தை தலைமை தாங்கும் சிங்கள உயர் குழாம் சஜித் பிரேமதாச போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் ஜனாதிபதி ஆசனத்தில் உட்கார ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே தான் கட்சி இரண்டாக உடைந்தது. மக்கள் சக்திக்கும் அதன் கூட்டு கட்சிக்கும் இணைந்து அதிக ஆசனங்கள் இருந்தபோதிலும் சாதியத்தின் அடிப்படையில்த் தான் சிங்கள தேசத்தின் அரசியல் தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்ள முடியாத தலைவராக காணப்படுகிறார்.

இந்தப் பலவீனம் ராஜபக்ஷக்களுக்கு ஒரு பலம் தான். இருப்பினும் ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப் படவில்லை என்பதுவும் இதனால் பொதுமக்கள் மத்தியில் மக்கள் மத்தியிலும் கட்சிக்கும் கட்சியின் உள்ளும் குழப்பங்களும் அதிருப்தியும் நிலவுவது ராஜபக்சக்கள் செல்வாக்கை இழந்து வருவதையும் கோடிட்டு காட்டுகிறது.

கட்சிக்குள்ள குழப்பங்களுக்கு பல உள்நோக்கங்களும் பல்வேறுபட்ட காரணங்களும் உண்டு தமிழின எதிர்ப்பு வாதத்தையும், இந்திய எதிர்ப்பு வாதத்தையும் மிக ஆழமாக வரித்துக் கொண்டு கொண்டு இலங்கை தீவில் தமிழ் இனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மானசீகமாக விரும்பும் ராஜபக்ச ராஜபக்சே குடும்பமும் அதே இலட்சியத்துடன் இருக்கும் வியத்மகா அமைப்பும் மாகாண சபை மூலம் தமிழர்களுக்கு ஏதேனும் சிறிய உரிமைகள் கிடைத்து விடக்கூடாது என்பதே என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.

எனவே மாகாணசபையை முறையில் தமிழர்களுக்கு என்று ஒரு அதிகார அலகு இருப்பதனையும், அத்தகைய ஒரு அமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அல்லது கிடைக்கக்கூடிய சிறிதளவான நலன்களை கூட விரும்ப மாட்டார்கள். இந்த வகையில் தேர்தலைஅதனை தட்டிக் கழிக்க காரணம் தேடிக் கொண்டிருப்பவர்கள் இத் தேர்தலை நடத்துவதற்கு உண்மையில் விரும்ப மாட்டார்கள். அத்தோடு இன்று ஏற்பட்டிருக்கின்ற கோவிட் தொற்றுநோய் நெருக்கடியும் அவர்களுக்கு கை கொடுத்து உதவும்.

ஆனால் வெளிநாட்டு காரணங்கள் என்று எடுத்துக்கொண்டால் சீனாவின் துறைமுக நகர அபிவிருத்தி என்பதற்கு சிங்கள மத்தியதர வர்க்கத்தில் இருந்தும் பௌத்த பிக்குகள் மட்டத்திலிருந்து எதிர்க் கட்சி மட்டத்தில் இருந்து கணிசமான அளவு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உண்மையான எதிர்ப்பு அல்லது உள்நோக்கம் கொண்ட எதிர்ப்பா அல்லது வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்ட எதிர்ப்பா என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியே நோக்கப்பட வேண்டும்.

இவ்வாறு எதிர்ப்புக் கிளம்பும் பட்சத்தில் சீனா தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து பேச முனையும். அப்போது தான் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறும். இதனூடாக ஊடாக சிங்கள எதிர்ப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். இத்தகைய ஒரு சூழ்ச்சி கரமான ஒரு அரசியல் நகர்வாகக்கூட இந்த மத்திய தர வர்க்கத்தின் எதிர்ப்பு தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம். எது எப்படியோ 'யானைகள் கூடிக்குலாவி புணர்ந்தாலும் புல்லுக்கு சேதம் அவை தமக்கிடையே சினம் கொண்டு சண்டையிட்டாலும் புல்லுக்கு புல்லுக்குத்தான் சேதம்' சிங்களம் என்கின்ற யானைகள் கூடி புணர்ந்தாலும் தமிழ் மக்களாகிய புல்லுக்கு தான் சேதம் அவை தமக்கிடையே வெறிகொண்டு சண்டையிட்டாலும் தமிழ் மக்களாகிய புல்லுக்கு தான் சேதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே சிங்கள மக்களின் முழு ஆதரவை பெறுவதற்கு சீனாவுக்கு அவசியப்படுவது இந்திய, தமிழின எதிர்ப்பின் பெயரால் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பது. அதனுாடாக தனக்குரிய ஆதரவையும் தனது நலனையும் இலங்கையில் நிலைப்படுத்துவது. மாகாண சபை தேர்தல் நடத்தாமல் விடுவதன் மூலம் இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளிட்ட மேற்குலகம் எதிர்க்கவைப்பது.

அந்த எதிர்ப்பின் பின்னணியில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவை சீனாவினால் பெறமுடியும். இதனாலும் மாகாணசபைத் தேர்தல் நடப்பதை சீனாவும் விரும்பாது. எனவே சீனா, ராஜபக்ச அரசாங்கம், தேர்தல் விஞ்ஞாபனம், பௌத்த மகா சங்கம், பௌத்த சிங்கள ஆளும்குழம் என்பன ஒரே நேர்கோட்டில் தேர்தலைத் தவிர்த்தல் என்ற ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.

எனவே அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை விரும்பப்போவதில்லை. ஆனால் தமிழ்த்தலைமைகள் மத்தியில் தேர்தல் பற்றிய புத்துணர்வு ஆர்வமோ மாகாணசபை சார்ந்த விவகாரத்தை தமிழரின் அரசியல் இன்றியமையாத ஒருபகுதி என்பதனையும் புரிந்திட,கண்டுகொள்ளவில்லை. இந்தத் தேர்தலில் தமக்கு ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் அச்சமும் நலம் சார்ந்த கணக்குகளும் இத்தேர்தலை அவர்கள் அர்த்தபூர்வமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்பதை வேதனையுடன் இங்கே இப்பந்தி பதிவு செய்கிறது.

எனவே தேர்தலுக்கான அரசியல் என்பது உள்நாட்டு அரசியலிலும் அண்டை நாட்டு உறவு என்ற அடிப்படையில் சீனாவின் அரசியல் நிகழ்ச்சிகளிலும் தலைவர்களின் மெத்தனமான போக்கிலும் தேர்தலுக்கான வாய்ப்பில்லை. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இலங்கை அரசாங்கத்தின் செவியை பிடிப்பதற்கு மாகாணசபைத் தேர்தல் அவசியப்படுகிறது. அந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் நலன்கள் இத்தேர்தலில் அடங்கியுள்ளது.

எனவே இந்தியா-அமெரிக்கா என்கின்ற ஒரு காரணியை தவிர தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு அரிதினும் அரிது. எனவே இந்திய அமெரிக்கா சார்ந்த மேற்குலகின் வற்புறுத்தல் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அந்த அதிகரிப்பு தான் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அந்த நெருக்கடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஈரடி பின்னால் ஓரடி பின்னால் என்ற தத்துவத்தை பின்பற்றி சீனாவின் ஒப்புதலுக்கு ஊடாகவே இலங்கை அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

08 Jan, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், கொழும்பு, கல்லடி, Dartford, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, உடுவில், வவுனியா

04 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

30 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வத்தளை

05 Jan, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, சென்னை, India

04 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

07 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US