இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது! சரோஜா எம்.பி ஆதங்கம்
இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது எனவும், மனிதவுரிமை என்பது இன, மத உரிமை. அவர்களுக்கு உள்ள அடையாளங்களுக்கான உரிமை என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ பாதுகாப்பான சமுதாயம், அபிவிருத்தி அடைந்த நிலை, சமூக அங்கீகாரம் என்பன எமக்கு தேவைப்படுகிறது.
இவை அனைத்தும் கிடைத்தால் எமது எதிர்கால சந்ததி அச்சம் கொள்ளாது வாழக் கூடிய ஒரு சூழல் உருவாகும்.
இலங்கைத் தேசியம்
இலங்கைத் தேசியம் ஒரு பாதுகாப்பான தேசியமா? இலங்கை மக்கள் அனைவரும் சந்தேசமாக இருக்கின்றார்களா? இலங்கை மக்களுக்கான இலவச கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில் வாய்ப்பு, மொழி உரிமை, பேச்சு உரிமை, பொதுப்போக்குவரத்து என்பன கிடைக்கக் கூடியதாக இலங்கை இருக்கிறதா? பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
இலங்கை பின்தங்கிய ஒரு நாடு. இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது.
மனிதவுரிமை என்பது இன, மத உரிமை. அவர்களுக்கு உள்ள அடையாளங்களுக்கான உரிமை.
அடிப்படை மனிதவுரிமை என்பதில் உடை, உறையுள், உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் இவை அனைத்துமே இல்லாமல் செய்யப்படுகின்ற முறை இருக்கின்றது.
அதை மாற்ற வேண்டும். அதனை மாற்றுவது கட்டாயமானதாகும். இலங்கையில் 100 இற்கு 51 சதவீதம் பெண்கள்.
வாக்காளர் பட்டியலில் 56 சதவீதம் பெண்கள் உள்ளனர். அரசாங்கத்தின் இந்த நிலைக்கு கூடுதலாக வாக்களித்தவர்கள் பெண்கள். இந்த தலைவிதிக்கு காரணம் பெண்கள்தான்” என கூறியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
