பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்தினை நோக்கி படையெடுக்கும் மக்கள்
வவுனியா மாவட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களினை மக்கள் நாடிவருகின்றமை அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
லங்கா ஜ.ஓ.சி நிறுவனத்தில் அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையினாலே, மக்கள் மேற்கண்டவாறு எரிபொருள் நிலையங்களில் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
லங்கா ஜ.ஓ.சி நிறுவனத்தில் ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303 ரூபா என்பதுடன் ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 332 ரூபாவாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அதிகரித்தது. எனினும் இது வரையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
இதனையடுத்து மாவட்டத்தில் பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக, மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக, வேப்பங்குளம் 8ம் ஒழுங்கை அருகில், ஹொரவப்பொத்தானை வீதியிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்தினை நாடி வருகின்றனர்.
மக்களின் நேரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரானுவத்தினர் மற்றும் பொலிஸார்
கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.











மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam
