அஸ்வெசும கணக்கு திறப்பதற்கு வங்கியில் காத்திருக்கும் மக்கள்(Video)
மலையகத்தில் அஸ்வெசும நலன்புரி நிதியினை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் தங்களுக்கான வங்கி கணக்குகளை திறப்பதற்காக ஹட்டன் நகரில் உள்ள மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் நேற்று(26.07.2023) மாலை முதல் குடியிருந்து வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வங்கிகளில் கணக்கு திறப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இந்நிலை வங்கியில் அதிக நெரிசல் நிலை உருவானதால் வங்கி கணக்குகளை திறப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட அளவு வங்கி கணக்கு மாத்திரம் திறக்கப்படுவதனால் வங்கியிலேயே தங்கியிக்க கூடிய நிலை உருவாகியுள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மீண்டும் வரிசை
வயோதிபர்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் பெண்கள் தங்கியிருப்பதனை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த சில தினங்களாக வங்கி கணக்கினை ஆரம்பிப்பதற்காக வருகை தந்ததாகவும், முடியாது போனதால் இன்று எப்படியாவது ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் நேற்று இரவு முதல் வந்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டில் வரிசை முறை இல்லதொழிக்கப்பட்ட நிலையில் தற்போது அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பது பொருத்தமற்ற நிலை எனவும் எனவே வங்கி கணக்குகளை திறப்பதற்கு தேவையான விண்ணப்ப படிவங்களை வழங்கி அவர்களுக்கு கிழமை நாட்களை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இவ்வாறான நெருக்கடிகளை தவிர்த்து கொள்ளலாம் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
