இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கை மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகவல்
இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
