மக்கள் வெள்ளத்துடன் பொலிகண்டியை வந்தடைந்த நீதிக்கான பேரணி!
பொலிகண்டியை வந்தடைந்தது நீதிக்கான பேரணி அலைகடல் என திரண்டு மக்கள் வெள்ளத்தில் நிறைந்துள்ளது.
வாழ விடு வாழ விடு தமிழினத்தை, அழிக்காதே அழிக்காதே வாழ்விடங்களை அழிக்காதே என்ற வாசகங்கள் விண்ணதிரச் சிங்களத்தின் செவிப்பறை கிழிய ஐந்து நாள் பேரணி இன்று மாலை மணியளவில் வந்தடைந்துள்ளது.
பொத்துவிலில் கடந்த 3 ம் திகதி கொட்டும் மழையில் பல விசேட அதிரடிப்படையினர், பொலிஸாரின் பல்வேறுபட்ட தடைகளை உடைத்து , அரசியல் சமூக ஆர்வலர்களின் நீதிமன்ற தடையுத்தரவுகளை வழங்கப்பட்டு மக்கள் உணர்வெழுர்சி பாரிய போராட்டமாக வடக்கு, கிழக்கு தாயகங்களில் உணர்வோடு அனைவரும் தங்களை ஈடுபடுத்தினர்.
அம்பாறை பொத்துவில் ஆரம்பித்த நீதிக்கான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று 7 ம் திகதி யாழ் பொலிகண்டி முற்றத்தை வந்தடைந்துள்ளது.
தமிழர்களுக்கு அநீதி இழைத்து சிங்களத்திற்கும், தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், உள்ளிட்ட தமிழருக்கு இந்த தேசத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்திய போராட்டம் உலகைச் சற்று இலங்கை தீவை உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

















நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
