சுமந்திரன், சாணக்கியனின் ஏற்பாட்டில் மக்கள் அணிதிரண்டு கையெழுத்து: சஜித்தும் களமிறங்கினார் (Photos)
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இரு மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மூவின மக்களும் அணிதிரண்டு தத்தமது கையெழுத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இதில் எதிர்க்கட்சிக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய மக்கள்
சக்தியின் முக்கியஸ்தர்கள், முற்போக்குக் கட்சிகளின் தலைவர்கள்,
உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும்
மூவின மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தத்தமது கையெழுத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.



தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு