திருகோணமலையில் யானை மின்வேலிக்கு மக்கள் எதிர்ப்பு
திருகோணமலை மாவட்டத்தில் ரொட்டவெவ மற்றும் மிரிஸ்வெவ கிராமங்களில் தங்களது வீடுகளுக்கு பின்னால் யானை மின் வேலி அமைத்து வருவதாக தெரிவித்து அப்பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது வீட்டுக்கு பின்னால் யானை மின் வேலி அமைக்க வேண்டாம் என தெரிவித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பின்மை
இதனையடுத்து குறித்த பகுதியிலிருந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.
தங்களது வீட்டுக்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்திற்கு அருகில் யானை மின் வேலி அமைப்பதினால் தங்களது பிள்ளைகளை தனிமையாக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த மக்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், யானை மின் வேலி அமைப்பதானால் கிராமத்தைச் சுற்றி யானை மின் வேலி அமைக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா



