புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு
புதுக்குடியிருப்பு - மல்லிகைத்தீவு பகுதியில் தோண்டப்பட்ட ஆள்துளை கிணற்றிலிருந்து நீர் எடுப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மல்லிகைத்தீவு கிராமத்தில் 2018ம் ஆண்டு உலக வங்கியின் (World Bank), நிதிப் பங்களிப்புடன் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு நீர் விநியோகம் செய்வதற்காக குடிநீர் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் மல்லிகைத்தீவு கிராமத்தில் 3 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டதோடு குறித்த கிராமத்தில் பாரிய நீர்த்தாங்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறுகளினால் மல்லிகைத்தீவு பகுதியில் நிலக்கீழ் நீர் வெகுவாக பாதிப்படைவதாகவும் தமது சுய தேவைக்காக நீரை எதிர் காலத்தில் பெற்றுக் கொள்ள பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என கோரிக்கை ஒன்றை முன்வைத்து அதற்கு எதிராக குரல்கொடுத்து வந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு ம்முதல் தமது எதிர்ப்பினை மல்லிகைத்தீவு பொது அமைப்புக்கள் வெளியிட்ட போதும் அவர்கள் குறித்த திட்டத்தை எதிர்க்கவில்லை எனவும் தமது கிராமத்தில் அமைக்கப்பட்ட குழாய்க்கிணற்றில் இருந்து நீரை பெறாது வேறு இடத்திலிருந்து நீரை பெறுமாறும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி நீர்த்தாங்கி அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் குறித்த குழாய்க்கிணறுகளில் இருந்து நீர் எடுப்பதற்காக அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளது.
தொடர்ச்சியாக அபிவிருத்திக்குழு கூட்டங்களில் குறித்த விடயமாக கலந்துரையாடி பல்வேறு வகைகளில் மக்கள் போராடியபோதும் தீர்வில்லாத நிலையில் அதற்கான தீர்க்கமானதொரு தீர்வை பெற்றுத் தருமாறு 02-03-2021 அன்று இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து அதற்கான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இரு தரப்பினர்களுக்கும் இடையே ஒருமித்த சமரசத் தன்மையின்மையினால் இறுதியில் நீர்வளங்கள் வடிகால் அமைப்பு சபையின் இந்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமது கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீரை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் நீரை பெற்றுக்கொள்ள மாற்றுவழியை தேடுமாறும் மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கிணற்றிலிருந்து நீர் எடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாற்றுவழியூடாக நீரை பெற்றுக்கொள்ள ஏற்ற நடவடிக்கைகளுக்கு செல்லுமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு தெரிவிக்கப்பட்டது அதற்கான நிதிகளை பெற்றுக்கொள்ள உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகாரதலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ஜெயகாந்தன், முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கிருபாசுதன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தவக்குமார், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஆ.புவனேஸ்வரன், து.ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
