கிளிநொச்சியில் இருபது நாட்களாக தொடரும் மக்கள் போராட்டம்(Video)
கிளிநொச்சி-பூநகரி பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருபதாவது நாளாக மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் நேற்று(22.08.2023) அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மக்கள் ஆர்ப்பாட்டம்
வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்களும் மக்கள் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பொன்னாவெளி எனும் பழமை வாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்காக பல
ஏக்கர் காணியை சுவீகரித்து, பல மீற்றர்கள் ஆழத்தில் தொழிற்சாலைக்கான கல்
அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான முதற்கட்ட தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுவதற்கு
எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.




