வவுனியா- செட்டிக்குளத்தில் மெனிக்பாம் மக்களினால் போராட்டம் முன்னெடுப்பு

Vavuniya SL Protest Northern Province of Sri Lanka
By Thileepan Jul 22, 2025 06:00 AM GMT
Report

வவுனியா, செட்டிக்குளத்தில் மெனிக்பாம் மக்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது நேற்று(21)கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

தமக்கு அருவித்தோட்டம் பகுதியில் வழங்குவதாக கூறிய ஒரு ஏக்கர் விவசாய காணியினை வழங்க வேண்டும் என தெரிவித்தே மக்கள் இந்தப் போராட்டத்தை  முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் வரி தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் வரி தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

குடியேற்றம்

இதன்போது, போரட்டக்காரர்கள் 'அரச அதிகாரிகளே ஏழைகளின் ஒருவேளை உணவை நிம்மதியாக உண்ணவிடு, மெனிக்பாமில் வசிக்கும் மக்களுக்கு வயல் காணி ஒரு ஏக்கர் வீதம் வழங்கு' போன்ற பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், எங்களை 2004ஆம் ஆண்டு சிதம்பரபுரம் முகாமில் இருந்து மெனிக்பாமிற்கு அரை ஏக்கர் மேட்டுக்காணி மற்றும் 01 ஏக்கர் வயல் காணி தருவாதாக தெரிவித்து குடியேற்றம் செய்தனர். ஆனால் தற்போது வரை எங்களிற்கு 01 ஏக்கர் வயல் காணி தரப்படவில்லை.

வவுனியா- செட்டிக்குளத்தில் மெனிக்பாம் மக்களினால் போராட்டம் முன்னெடுப்பு | People Protest In Demanding Agricultural Land

மேலும் கூலி வேலையினை மேற்கொண்டே எமது வாழ்வாதாரம் போகின்றது. அத்தோடு கடந்த காலத்தில் கிராம சேவையாளர் இடம் சென்றும் வயல் காணி தொடர்பாக நாங்கள் பதிவு செய்திருந்தோம். அதன் மூலமாக ஒரு சிலருக்கு வழங்கப்பட்டது. ஆனால் 20 வருடமாகியும் எங்களிற்கு கிடைக்கவில்லை.

அத்தோடு அருவித்தோட்டம் கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் பல ஏக்கரில் வயல் காணிகளை பெற்று வயல் செய்கின்றனர். ஆனால் எங்களிற்கு எந்த வயற் காரணிகளும் கிடைக்கவில்லை. எனவே எங்களிற்கு தருவதாக தெரிவித்த வயற்காணியினை தரவேண்டும் என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் 2004ஆம் ஆண்டில் இருந்து அருவித்தோட்டம் பகுதியில் மானாவாரியாக அரை ஏக்கர் மற்றும் ஒரு ஏககரில் பயிர் செய்து வந்திருந்தோம். 2005, 2006, 2007 காலப் பகுதியில் காணியினுள் இராணுவம் எங்களை நுழைய விடாமல் எங்களை வற்புறுத்தி இராணுவத்திற்கு வழங்க கோரியிருந்தனர்.

மேலும் குறித்த காணிகள் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் 13 ஏக்கர் அடிப்படையில் வழங்கப்பட்ட காரணிகளாகும். மேலும் இக்காணி உரித்தினை நீக்கி வேறு ஒருவருக்கு வழங்க முடியாத நிலையும் இருந்தது. இந்நிலையில் குறித்த காணிக்குரியவர் இல்லாத நிலையில் காணி இல்லாதவர்கள் கூட குறித்த காணிகளை துப்பரவு செய்து பயிர் செய்கை நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பிரதேச செயலகம் மற்றும் கமநல சேவை நிலையத்தாலும் அனுமதி வழங்கப்பட்டது.

செம்மணி மனித எச்சங்கள்: உண்மைகளை வெளிக்கொண்டு வர வழி கூறும் சுமந்திரன்

செம்மணி மனித எச்சங்கள்: உண்மைகளை வெளிக்கொண்டு வர வழி கூறும் சுமந்திரன்

காணி வழங்குவதற்கான நடவடிக்கை

குறிப்பாக 2010ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச காலத்தில் எந்தவொரு நிலமும் பாவனையின்றி இருக்கமுடியாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. மேலும் காணி இல்லாதவர்களிற்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட போது மூவர் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் போது இருவர் அவற்றினை கைவிட்டு செல்லும் நிலை காணப்பட்டதுடன், கைவிடப்பட்ட பகுதிகள் காடுகளாக காணப்பட்டமையால் காட்டு விலங்குகளின் தாக்கம் பெருமளவு ஏற்பட்டது.

இதன்போது பிரதேச செயலகத்தால் குறித்த பகுதியினை அருகில் உள்ளவர்கள் துப்பரவு செய்து பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டதுடன், உரியவர்கள் வரும் போது நட்ட ஈட்டினை பெற்றுக்கொண்டு வழங்க வேண்டும் என பிரதேச செயலகத்தால் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா- செட்டிக்குளத்தில் மெனிக்பாம் மக்களினால் போராட்டம் முன்னெடுப்பு | People Protest In Demanding Agricultural Land

மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கமக்கார அமைப்பை சேர்ந்தவர்கள் பத்து ஏக்கர், பதினைந்து ஏக்கர் என செய்வதாக கூறினர். இது தவறான கருத்தாகும். ஏனெனில் குறித்த காணிகளிற்கு உரியவர்கள் குத்தகைக்கே வழங்கியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு காணி அடையாளப் படுத்தப்பட்டும் காணியினை துப்பரவு செய்து எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் இது தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளர் சுலோஜனா  நேரடியாக சென்று கலந்துரையாடிய போது, குறித்த அருவித்தோட்டம் பகுதியில் விவசாயம் செய்வதற்கு மேலும் காணி இருப்பதாக பிரதேச செயலாளரினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு குறித்த காணியினை துப்பரவு செய்ய வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டால் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியுமென கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த காணியினை பெற்றுத் தருவதற்கான தீர்மானத்தினை மேற்கொள்ளவதாக போராட்டக்காரர்களுக்கு வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் குறித்த போராட்டமானது கைவிடப்பட்டிருந்தது.

பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்

பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை என்னிடம் தாருங்கள்! வலியுறுத்தும் தேரர்

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை என்னிடம் தாருங்கள்! வலியுறுத்தும் தேரர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US