ஐ.மக்கள் சக்தி, ஐ.தே.கட்சியுடன் கூட்டணி அமைக்காது! - ரஞ்சித் மத்தும பண்டார
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் செய்ய முயற்சிக்கப்படும் அரசியல் வேட்டையாடலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்கள் இருப்பதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன் எதிர்காலத்தில் நடைபெற உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாட்டில் இது குறித்து கூடிய கவனத்தை செலுத்த அவர்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.