நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து களமிறங்கிய மக்கள் (Video)
நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள் வீதிகளுக்கு இரங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வாகனங்களை வீதிகளின் குறுக்கே நிறுத்தியும் பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பண்டாரவளை, திகன, அனுராதபுரம், மாத்தறை போன்ற பல பகுதிகளில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம்
அனுராதபுரத்தில் பெருமளவு மக்கள் எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இரங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனரக வாகனங்களை வீதிகளின் குறுக்கே நிறுத்தியும் அதன்மேலே ஏறி நின்று மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாத்தறை
மாத்தறையில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பேருந்தை வீதிக்குக் குறுக்கே நிறுத்தி அதன்மேல் ஏறி நின்றபடி கொடிகளை ஏந்தியவண்ணம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
