வவுனியா மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்!
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
அதேபோல் வவுனியா வாழ்மக்கள் புதுவருட கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.
புத்தாண்டை முன்னிட்டு கந்தசாமி ஆலய குருக்கள் உமாஸ்ரீ தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கலந்து கொண்டோர் அமைதியாக தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
காலை வேளையிலேயே இந்து ஆலயங்களிலும் அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மக்கள் சமூக இடைவெளிகள் பேணப்பட்டு பொலிசார் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைவாக வழிபாடுகள் இடம்பெற்றன.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri