அம்பலவன் பொக்கணை கடலில் நீராடி ஆடி அமாவாசை விரதத்தினை மேற்கொண்ட மக்கள்
ஆடி அமாவாசையில் உயிரிழந்த முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து விரதம் இருந்து வழிபடும் மரபு தமிழர்களிடம் காணப்படுகின்றது.
அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மன்னாகண்டல் கிராமத்தில் உள்ள கெருடமடு பிள்ளையார் ஆலயத்திலும், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் அம்பவலன் பொக்கணை கிராமத்தில் ஆலடிப்பிள்ளையார் என்ற ஆலயத்திலும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தர்பணம் செய்து முன்னோருக்காக விரதம் இருந்து தீர்த்தம் ஆடுவார்கள்.
கடலில் தீர்த்தம் ஆடும் நிகழ்வு
இவ்வாறு ஆடி அமாவாசை தீர்த்தம் ஆடுவதற்காக முதல் நாள் இரவு புதுக்குடியிருப்பு கந்தசாமி கோவிலில் இருந்து முருகப்பெருமான் வீதி வழியாக வந்து ஆலடிப்பிள்ளையார் ஆலயத்தில் அமர்ந்து அதிகாலை வேளை அம்பலவன் பொக்கணை கடலில் தீர்த்தம் ஆடும் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு உயிரிழந்த தந்தையர்களுக்காக தர்பணம் கொடுத்து கடலில் தீர்த்தமாடி ஆடி அமாவாசை விரத வழிபாட்டினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















