மக்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள்: முன்னாள் பிரதியமைச்சர் கருத்து
மோசமடைந்த நாடு தற்போது சரியான பாதையில் செல்லும் நிலையில், இதனை வைத்து தேர்தலில் மக்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் (Abdulla Mahroof) தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (14.07.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ரணில் விக்ரமசிங்கவால் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என்ற நிலையிலும் ஜே.விபியினரோ, ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய தேசிய கட்சியோ அதை விரும்பவில்லை.
பொதுத் தேர்தல்
நான்கரை வருடத்தில் பொதுத் தேர்தலை நடாத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. 20ஆம் திருத்தத்தில் கோட்டாபய அதனை இரண்டரை வருடங்களில் நடாத்தலாம் என உறுதிப்படுத்தினார்.
தற்போது அநுரகுமார, சஜித் பிரேமதாச போன்றவர்கள் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். மகிந்தவின் மொட்டுக் கட்சியினர் பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும் என்ற போதிலும் ஜனாதிபதி அதனை விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |