துப்பாக்கி சத்தங்கள் இல்லாத போர் சூழலில் மக்கள் வாழ்கிறார்கள்: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு (Video)
எங்களுடைய மக்கள் துப்பாக்கி சத்தங்கள் இல்லாத போர் சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(22.11.2023) நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
மேலும், “வரவு செலவு திட்டத்தை பார்க்கும் போது அது அழகான காகிதப் பூ என முன்பே வர்ணித்தேன். அரசாங்கம் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஓய்வுதிய திட்டம் வழங்துவது, மாகாண சபையூடாக பல்கலைக்கழகம் அமைப்பது எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
சுனாமி எவ்வாறு எங்களுடைய மக்களை காவுகொண்டதோ அதை போல இந்த அரசாங்கம் வைத்தியர்களை வெளியில் அனுப்பிவிட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
