தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் அதிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியாக கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கோவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் இன்று கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் தலைமையில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் இங்கு 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
கோவிட் தாக்கம் அதிகமாகவுள்ள பகுதிகள் இனங்காணப்பட்டு அங்கு அபாய நிலையில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இன்றைய தினம் பெருமளவான முதியவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு வருகைதந்ததை காணமுடிந்தது.
