கெப் ரக லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 11 பேர் படுகாயம்(Video)
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ் பீளிக்கு அருகில் கெப் ரக லொறி ஒன்று பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம்
இந்த கெப் ரக லொறி பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.
இந்த லொறியானது பூண்டுலோயா பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு மரணவீடு ஒன்றுக்கு செல்வதற்காக 11 பேருடன் காலை பயணித்துள்ளது. பின் மீண்டும் பூண்டுலோயா நோக்கி இந்த லொறி நேற்று மாலை பயணிக்கையிலே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை
இதன்போது சாரதி உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பலத்த
காயங்கள் ஏற்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
