சூடானில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
சூடான் தலைநகர் கார்டூமில் விமானத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு இராணுவம் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்த வான் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இடம்பெயர்ந்துள்ள மக்கள்
சூடான் இராணுவத்துக்கும், துணை இராணுவ கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக இதுவரை 1100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி, சூடானுக்குள் சுமார் 2.2 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதுடன் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan