மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் (Photos)
கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இன்று காலையிலிருந்து விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்ள இன்று மதியம் பன்னிரண்டு மணியைத் தாண்டியும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இதில் உணவகக்காரர்கள், விவசாயிகள், மற்றும் சமையல் மற்றும் இதர தேவைகளுக்காகவே மக்கள் இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்கின்றனர்.
மின்வெட்டு மற்றும் எரிவாயு விலை உயர்வு காரணமாகச் சமைக்க மற்றும் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு மண்ணெண்ணெய் எடுத்துச் செல்வதாக ஹட்டன் மற்றும் கொட்டகலை சூழவுள்ள பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து மண்ணெண்ணெய் வாங்கப் பிரதான வீதியின்
ஓரத்தில் சுமார் இரண்டு கிலோமீற்றர் வரை நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri