கிளிநொச்சியில் குடிநீர் இணைப்பு கிடைக்காமல் மக்கள் அவதி!
கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் புதிய குடிநீர் இணைப்புக்காகக் கட்டணம் செலுத்திய பின்னரும், உரிய காலத்தில் நீர் இணைப்பைப் பெற முடியாமல் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத் தகவல்களின்படி, புதிய நீர் இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக 4 நாட்களுக்குள் நீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நடைமுறையில் அப்பகுதி மக்கள் இந்நிபந்தனையின்படி இணைப்புகளைப் பெற முடிவதில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்கள் அவதி
புதிய நீர் இணைப்புகளுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் தாமதித்தே இணைப்புகள் வழங்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிளிநொச்சியின் பல பாகங்களிலும் பொதுமக்கள் புதிய நீர் இணைப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தும், கட்டணங்களைச் செலுத்தியும் நீண்டநாட்களாகக் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது.

இந்நிலைமை அன்றாடத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் மக்களிடையே பெரும் நெருக்கடியையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் இந்த முறையற்ற தாமதங்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து உடனடி கவனம் செலுத்தி, மக்களுக்கு உரிய காலத்தில் தடையின்றி குடிநீர் இணைப்பு கிடைக்கத்தக்க வகையில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam