13ஆவது திருத்தச் சட்டத்தின் ஒப்பந்தங்கள் நிராகரிக்க முடியாதவை! இரா.துரைரெத்தினம் பதில்
கடந்த வாரம் இலங்கை இந்திய இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பல முன்னுதாரணங்களை கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்பெற வைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணம் தொடர்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த வாரம் இலங்கை இந்திய இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பல முன்னுதாரணங்களை கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்பெற வைத்துள்ளது.
பேச்சுவார்த்தையில் இலங்கை தொடர்பான பல விடயங்களைப் பேசி இருந்தாலும் இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை முதன்மைப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதென்பது வரவேற்கத்தக்கது.
இரண்டு நாடுகளும் முரண்படக் கூடாது என்னும் விடயத்தில் அக்கறை காட்டியதை அவதானிக்கக் கூடியதாகவும் இருந்தது.
13ஆவது திருத்தச் சட்டம்
பல ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்குமிடையில்
நடைபெற்றிருந்தாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்ட
ஒப்பந்தமானது நிராகரிக்க முடியாதவை.
அதிகாரப் பரவலாக்கல் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டாலும் சில விடயங்களை திருத்தி அமைப்பதற்கும், இல்லாமலாக்குவதற்கும், இரத்துச் செய்வதற்கும் பல விடயங்களை உள்ளடக்குவதற்கும் அரசியல் யாப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கருத்துக்களை பலர் தெரிவிக்கின்றனர்.
35 வருடங்களுக்குள் பல தடவைகள் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதென்பது ஒரு வகையில் வரவேற்கக் கூடிய விடயமாகும்.
பெரும்பான்மை அனுமதி
எனவே 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நடைறைப்படுத்துவதற்கு நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள இனங்கள் அனுமதிக்குமா? பெரும்பான்மையானோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என சர்வதேசத்திற்கு சொல்லுவதற்கு நியாயங்கள் உள்ளதா? மிகவும் சிறுபான்மையான இனம் தங்களின் உரிமைகளை, நியாயாதிக்கத்தை கேட்கும் போது நிராகரிக்கக் கூடாது.
இவ்விடயத்தில் அனைத்தின மக்களும் நன்மை பெறக் கூடியதாக உள்ளதால் கிராமம் தோறும் சென்று சமூகத்திற்கு சேவை செய்வதற்கு வழி வகுக்கும் பட்சத்தில் அனைத்தின மக்களும் நன்மை பெறுவதோடு சுபீட்சமான நாடு உருவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |