ஆலய நிகழ்வுகளில் மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய விடயம்
ஆலயங்களில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றுகின்றது. விழாக்களில் மக்கள் ஐஸ்கிறீம் கோப்பைகள், கச்சான் சரைகள், பொலித்தீன்கள் போன்றவற்றை ஆலய வீதிகளில் இடுவதை மாற்றிக்கொள்ள வேண்டிய விடயமாகும்.
ஆலயம் தூய்மை மிக்க இடமாகும். ஆலய வழிபாடுகளில் ஈடுபடும் மக்களிடம் ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு காணப்படுதல் அவசியம்.
ஆலயங்களில் பக்தர்கள் ஐஸ்கிறீம் கோப்பைகள் பொலித்தீன் பைகள்,கச்சான் சரைகள் போன்றவற்றை ஓரிடத்தில் போடுவதால் குப்பைகளை சேகரிக்கும் ஊழியர்களின் பணி இலகுவாக்கப்படும்.
கச்சான் கோதுகளை பைகளில் இடாமல் வீசுவதால் அவற்றை சுத்தம் செய்வது சிரமமானது.
ஆலயங்களில்விழாக்கள் ஆரம்பமாவதற்கு முன்பு தூய்மையாக உள்ளது. விழா முடிந்த பின்னும் அவ்வாறெ தூய்மையாக காணப்பட்டால் ஆலய நிர்வாக குழுவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக அமையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |