கனடாவில் போராட்டம் திரைப்படத்தை காண அலைமோதிய மக்கள் கூட்டம்
கனடாவில் “போராட்டம்” திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலை காண்பதற்காக பெரும் திரளான மக்கள் குவிந்துள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.
ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வெளிவந்துள்ள “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.
“போராட்டம்” திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
அலைமோதிய மக்கள் கூட்டம்
திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்கியுள்ளதுடன், IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளை முன்னெடுத்துள்ளன.

இவ்வாறு பிரமாண்டமாக உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கனடாவில் சிறப்புத் திரையிடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திரைப்படத்தைப் பார்ப்பதற்காக பெரும் திரளான புலம்பெயர் தமிழர்கள் திரையரங்குகளில் காத்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காணொளிகளாக அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.