கடும் கொதிப்பில் மக்கள்! - பொது நிகழ்வைத் தவிர்க்கும் ஆளும் தரப்பு
மின்வெட்டு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வுகளைத் தவிர்த்து வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரவித்துள்ளார்.
அரசு மீதான அதிருப்தியை மக்கள் தம் மீது காட்டக்கூடும் என்பதாலும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுமே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாரம சம்பத் பங்கேற்ற நிகழ்வொன்றின்போது, அவர் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு கூட முற்றுகையிடப்பட்டுள்ளது
இந்நிலையிலேயே ஆளுங்கட்சியினர் நிகழ்வுகளைத் தவிர்த்து வருகின்றனர்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri