கிளிநொச்சி- தருமபுரம் வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறு மக்கள் கோரிக்கை
கிளிநொச்சி-கண்டாவளை தருமபுரம் வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் போதிய அளவிலான புதிய கட்டிடங்கள் வசதிகள் இருந்த போதிலும் மக்களுக்கான சிகிச்சை முழுமையாக பெற முடியாத நிலையில் உள்ளதாக நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தருமபுரம் வைத்தியசாலையில் இருபத்தியொரு கிராமங்களுக்கு அதிகமான மக்கள் தமது வைத்திய சேவையினை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை
இருப்பினும் குறித்த வைத்தியசாலையில் ஒரே ஒரு வைத்தியரே நாளாந்தம் சிகிச்சை வழங்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் ஒரு நாள் பொழுதை வைத்தியசாலையிலேயே கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இருக்கின்ற ஒரு வைத்தியரே நாளாந்தம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், கிளினிக் நோயாளர்கள் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் அனைவருக்கும் சிகிச்சை வழங்குகின்றார்.
மக்கள் கோரிக்கை
கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் தற்பொழுது இயங்கி வரும் தருமபுரம் வைத்தியசாலையில் மகப்பேற்று வசதி, குருதி பரிசோதனை அவசர சிகிச்சை பிரிவு என பல சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது.
தற்பொழுது ஒரு குருதி பரிசோதனை செய்வதாயின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தருமபுர வைத்தியசாலையை தரம் உயர்த்தி சிறந்த சிகிச்சை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியில் வாழும் மக்கள் சார்பாகவேண்டி நிற்கின்றோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
[
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |