திருகோணமலையில் அடாத்தாக கபளீகரம் செய்யப்படும் காணிகள்! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை நிலாவளி வீதி, ஆறாம் கட்ட பிரதேசத்தில் உள்ள காணிகளின் பாதைகள் தனியார் ஒருவரால் தடைப்படுத்தப்பட்டுள்ளதால் 30இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (01.10.2024) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
குறித்த நடவடிக்கைகள் முன்னால் கிழக்கு ஆளுனரின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்டதாக அப்பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.
பாதிரியார் ஆதங்கம்
கடந்த 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் இந்த காணிகளில் வசித்து வருகின்ற நிலையில் பிரான்சிலிருந்து வருகை தந்த ஒரு நபர், இவை தன்னுடைய காணி என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதற்கான வழக்கு தற்போது நடந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக அங்கு ஒரு கிறிஸ்தவ மதஸ்தலம் ஒன்றுக்கான பாதை மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் மக்கள் அநேகர் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குறித்த கிறிஸ்தவ மதஸ்தல பாதிரியார் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும் எங்களது பூர்வீக குடியிருப்பு காணிகளை பாதுகாத்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
